வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியுள்ளார்.
வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் அரசிடம் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும். முகாம் வாழ் தமிழர்கள் மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்தால் அனுப்ப தயாராக இருக்கிறோம். வரும் ஜனவரி 12,13 என இரண்டு நாட்கள் சென்னையில் தமிழால் இணைவோம் விழா நடத்தப்படும். புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் மொழியின் வளர்ச்சி, தமிழ் ஆய்வுகளை வெளியிடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.