மார்ச் மாசம் 1000 ரூபாய் பாஸ் எடுத்து இருந்தால் தூக்கி போட்டு விடாதீங்க?

சென்னை மாநகர பேருந்தில் மார்ச் மாதம் எடுத்த 1000 ரூபாய் பாஸை இப்போது பயன்படுத்தி கொள்ளலாம் என போக்குவரத்து துறை கூறியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதியில் இருந்து இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வருகிறது.அதே போல் மாத மாதம் சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது இந்த நிலையில் இன்று முதல் பொதுபோக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை மாநகரப் பேருந்தில் மார்ச் மாதம் எடுத்த ரூ.1000 பாஸை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் எடுத்த பாஸ் ஒரு வாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அதை இப்போது பயன்படுத்திக்கொள்ளலாம் என போக்குதுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version