தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடு முழுவதும் மழைக் காலத்தில் டெங்கு வைரஸ் பரவி வருவதையும், வடகிழக்குப் பருவ மழையும் கருத்தில்கொண்டு,தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கினை நீடிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை உயர் அதிகாரிகளுடன் நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும்,தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா தொற்றான புதிய ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.