டிஆர்பி முறைகேடுகளில் ஈடுபட்டதாக மூன்று டிவி சேனல்கள் மீது மும்பை போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் Republic TV, Fakht Marathi, Box Cinema ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக மும்பை போலீசார் தெரிவித்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் கமிஷனர் பரம் பிர் சிங், டிஆர்பி விஷயத்தில் முறைகேடான வகையில் பார்வையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களை கவரும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.
சில ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மேற்கூறிய மூன்று சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் ரூ.400 முதல் ரூ.700 வழங்கப்பட்டு வந்துள்ளது. படிப்பறிவில்லாத மக்கள் கூட தங்கள் வீடுகளில் இந்த ஆங்கில சேனல்களை ஆன் செய்து வைத்துள்ளனர்.
இதுதொடர்பான விசாரணையில் பந்தாரி என்ற நபரை பிடித்து விசாரித்தோம். அதில் பல்வேறு வீடுகளில் வசிப்போரிடம் ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா உள்ளிட்ட சேனல்களை பார்க்குமாறு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்குரிய பணத்தை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடான வகையில் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுவது குற்றமாகும். அதன்பேரில் தான் நடவடிக்கை எடுத்துள்ளோம்.