வியாழக்கிழமை-யுடன் முடிவடைகிறது “குளிர்கால கூட்டத்தொடர்”!!


வியாழக்கிழமை-யுடன் முடிவடைகிறது “குளிர்கால கூட்டத்தொடர்” – மீதமுள்ள நான்கு நாட்களை சுமுகமாக நடத்த அவை தலைவர்கள் அழைப்பு.

டெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதுவரை 15 அலுவல் நாட்கள் நடந்திருந்தாலும் பெரும்பாலான நேரங்கள் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளான 29ம் தேதி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது; அன்றைய தினமே மாநிலங்களவையில் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவை ஜனநாயகத்திற்கு எதிரானது எனக்கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டங்களையும்! அலுவல் நேரங்களில் அமளியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டத் தொடரின் இறுதி வாரம் இன்று தொடங்குகிறது. வியாழக்கிழமை-யுடன் ( 23.12.2021 ) கூட்டத்தொடர் நிறைவு பெற உள்ள நிலையில் மீதமுள்ள நான்கு நாட்களில் அனைத்து எம்பிக்களும் கட்டாயம் அலுவல் நேரத்தில் பங்கேற்க வேண்டும் என ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களுடைய உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடிய உடனே “லக்கிம்பூர்” விவகாரத்தை முன்னெடுத்து அலுவல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கூட்டத்தொடரை திங்கட்கிழமை (இன்று) காலை 11 மணி வரை ஒத்திவைத்தார். முன்னதாக பேசிய அவர் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் தேவை!! எனவே அனைவரும் ஒரே கருத்துடன் அலுவல் நேரங்களில் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

இன்று குளிர்கால கூட்டத்தொடரின் 16-வது நாள் தொடங்குகிறது; இன்றைய தினமும் லக்கிம்பூர் விவகாரம் மற்றும் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

Exit mobile version