தூத்துக்குடி ரவுடி துரைமுத்து உடல் மீது வீச்சரிவாள் வைத்து உறவினர்கள் அடக்கம்!!!

வால்டர் வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் வில்லன் கும்பல் இறந்த ரவுடிக்கு சிலை வைத்து தியாகி கபாலி என்ற பட்டம் சூட்டுவார்கள் அதை போல ஒரு சம்பவம் நடந்துள்ளது, அது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து அவரை பிடிக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர் அப்போது அவர் வீசிய நாட்டுவெடிகுண்டு வெடித்து சிறப்பு காவலர் சுப்பிரமணியன் வீர மரணமடைந்தார். மற்றொரு குண்டை வீச முயன்றபோது அது கையிலேயே வெடித்து படுகாயமடைந்த ரவுடி துரைமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கூட்டாளிகள் 3 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை அரசு மருத்துவமனையில் உடற் கூறாய்வு செய்யப்பட்ட பின், காவலர் சுப்பிரமணியனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சுப்பிரமணியத்தின் மனைவி உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் காவலர் சுப்பிரமணியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரவுடி துரைமுத்துவின் உடலும் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது சொந்த ஊரான வெள்ளூரில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், உடல் மீது வீச்சரிவாள் வைத்து உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version