தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 75ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நேரத்தில், பிற மாவட்டங்களிலும் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. எனவே இந்த இக்கட்டான சூழலை சமாளிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சி, பேரூராட்சிகளில் இயங்கிவரும் 50க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் இனிமேல் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்கு மேல் செயல்படாது எனவும், அதனை மீறி செயல்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஏற்கனவே காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.