இந்தோனேசியாவை சேர்ந்தவர் அமக் ஒஹான். இவர் வசிக்கும் குடியிருப்பில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதை அவர் பலமுறை புகார் அளித்துள்ளார்.
ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக சேதமடைந்த நெடுஞ்சாலைக்கு நடுவில் தண்ணீரில் அமர்ந்து குவளையை வைத்து தண்ணீரை எடுத்து ஷாம்பு போட்டு குளித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை அடுத்து அவர் மீன் கம்பை வீசி மீன் பிடிக்கவும் செய்துள்ளார். இவருடைய இந்த செயலுக்கு பின்னர் அந்த குழியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலை பழுது பார்க்கும் பணிகள் உடனடியாக துவங்கப்பட்டுள்ளன .