தமிழகத்தில் ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது…

தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 4, 15,590 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் நோயினால் பலர் உயிரிழந்துவரும் நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1 கோடியே 14 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் மிக தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது இன்றைய கொரோனா நோய் பரவல் எண்ணிக்கையை பார்ப்போம்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, இதில் சென்னையில் மட்டும் மேலும் 1285 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,மொத்தம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,173 ஆக உயர்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 87 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 7,137 ஆக உயர்ந்துள்ளது. சற்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6045 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், இதுவரை மொத்தம் 3,55,727 பேர் குணமடைந்துள்ளனர்.

Exit mobile version