இன்று யாரும் ரேஷன் கடை பக்கம் போய்டாதீங்க…

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டது என்றும் இந்த பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது விடுமுறை தினங்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி ஆகிய நாட்களில் மேற்கொண்டனர்.

எனவே ரேஷன் கடைகள் வேலை நாட்களாக செயல்பட்ட அந்த நாட்களுக்கு செப்டம்பர் 19, அக்டோபர் 17(இன்று), நவம்பர் 21-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது இதனால் 2 வது வார விடுமுறை இன்று விடப்படுவதால் இன்று ரேஷன் கடைகள் செயல் படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version