இன்றும் விலை உயர்வை கண்டது தக்காளி

தமிழகத்தில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன என கூறப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் கோவையில் தக்காளியின் விலையானது கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.திடீரென நேற்று தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.135 ஆக விற்பனையானது. இதன் காரணமாக தக்காளி மொத்த விலையே கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது.வரத்து குறைவாக வந்ததன் விளைவு தான் இந்த விலை உயர்வுக்கு காரணம். பொதுவாக இந்த காலக்கட்டத்தில் ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்துதான் தக்காளிகள் அதிகளவில் வரும். ஆனால் அவற்றின் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இதுதான் விலை உயர்வுக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version