ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் – களைக்கட்டிய வியாபாரம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நேற்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்றனர்.
பின்னர் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது கோடை காலம் தொடங்கியதால் மோர், கரும்புச்சாறு, தர்பூசணி ஆகியவற்றின் விற்பனை களைகட்டியது. மேலும் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version