ரயில் போக்குவரத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, வரும் 7ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டுமின்றி மாநிலத்திற்குள் பயணியர் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளை தமிழக ரயில் டிக்கெட் கவுண்டர்கள், முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என்றும், நாளை முதல் முன்பதிவு தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
