ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு லாரி மீது பயணிகள் பேருந்து மோதியதில் 12 பேர் உடல் கருகி பலி?


டெல்லி,
ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர்-ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பயணிகள் பேருந்து, சரக்கு லாரி மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் இதுவரை 12 பேர் உடல் கருகி உயிரிழந்து இருக்கலாம் என ராஜஸ்தான் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






பேருந்து தீப்பிடித்தவுடன் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த மற்றவர்கள் கிட்டத்தட்ட 10 பயணிகளை மீட்டுள்ளனர். தீ விபத்தில் இருந்து தப்பித்த ஒரு பயணி கூறும் போது, காலை 9.55 மணிக்கு கிட்டத்தட்ட 25 பயணிகளுடன் பலோத்ரா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்டதாகவும், அப்போது சிறிது நேரத்தில் எதிர் புறத்தில் இருந்து வந்த சரக்கு லாரி (டேங்கர்) லாரி மோதியதில் பேருந்து பயங்கர சத்துடன் தீப்பிடித்தது. உடனடியாக ஒரு சிலரை மீட்டினர். பலர் தீயில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறையினர் தரப்பில், தீ அணைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது; இதுவரை 12 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் தொடர்ச்சியாக மீட்பு பணி நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள். விபத்து நடந்த இடத்தில் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version