படிக்கும் போதே இருமுறை கருக்கலைப்பு… காதலுனுக்கு வீடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய காதலி…!!

படிக்கும் போதே இருமுறை கருக்கலைப்பு… காதலுனுக்கு வீடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய காதலி கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தன்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதை ஊர் அறிய தெரிவிக்கும்படி கூறிய பெண் காதலன் மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹைதராபாத்தின் பஞ்சரா ஹில்ஸீல் வசித்து வந்தவர் ஐஸ்வர்யா (20) நர்சிங் பயின்று வந்த இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆஷர் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். நட்பில் ஆரம்பித்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளார்.

இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்காததால் ரகசியமாக ஒரு கோவிலில் 2020 ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே இருவரும் சம்பாதித்து நல்ல நிலைமைக்கு வந்த பிறகு திருமணத்தை ஏற்று கொள்கிறோம் என கூறி இருவரையும் பிரித்து வைத்தனர். அந்த பெண் ஒரு வேலைக்கு சென்று தனியாக வாடகைக்கு வீடு பிடித்து இருவரும் தங்கியுள்ளார். அப்போது அந்த பெண் இருமுறை கருவுற்ற போதும் காதலன் கலைக்க சொன்னதால் அவரும் கலைத்துள்ளார்.

இதன் பின் மீண்டும் இருவரும் பிரிந்து தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதற்கிடையே  அந்த பெண் தன்னுடைய காதலர் அஷெரிடம் தங்களின் திருமணத்தை ஊருக்கும் உலகிற்கும் தெரிவிக்கலாம் என்று கேட்ட போது அவர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா காதலனுக்கு வீடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசுக்கு தெரியவந்ததும் அவர்கள் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றார்.

Exit mobile version