ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தின் தீ விபத்தில் இருவர் சடலமாக மீட்பு!

ஸ்ரீசைலம் அருகே உள்ள நீர்மின் நிலையத்தில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில், தற்போது இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தெலுங்கானாவின் எல்லை பகுதியில், ஸ்ரீசைலம் அருகே உள்ள நீர்மின் நிலையத்தில், நேற்றிரவு சுமார் 10.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், உள்ளே சிக்கியிருந்த 10 பேரை மீட்டனர். 

மேலும், 9 பேர் மின் நிலையத்திற்குள் சிக்கியிருந்ததாக தகவல்கள் வெளியானது. அவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்துப் போராடி வந்த நிலையில், தற்போது இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற 7 பேரின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. 

இந்த விபத்தில், கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களால் மட்டுமே வெளியே வர முடிந்தது என்றும், கீழ்த்ளத்தில் இருந்தவர்களால் புகை காரணமாக வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, ஸ்ரீசைலம் அணையின் இடதுபக்க கரையில் பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் இது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது. 

Exit mobile version