திருமணமாகி இரண்டே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – காரணம் என்ன?

வேலூர் மாவட்டத்தில் திருமணம் ஆகி 2 நாளே ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் தான் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். புவனேஸ்வரிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 15-ம் தேதி திருமணம் ஆனது. இந்த நிலையில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

பெண்ணிற்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடைபெற்றதா, காதல் விவகாரம் ஏதேனும் உள்ளதா என்ற அடிப்படையில் புவனேஸ்வரியின் உடலை கைபற்றி வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் RTO-வும் விசாரணை நடத்தவிருக்கிறார்.

Exit mobile version