விஷவாயு தாக்கி தொழிலாளர் இருவர் பலி

ராசிபுரம் பட்டணம் முனியப்பம் பாளையம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர் இருவர் விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம் பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் உள்ள கழிவுகளை பிரிக்க உள்ளே இறங்கியபோது சஞ்சய், முருகேசன் ஆகிய 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும் 3 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கின்றனர். தொட்டியில் மழைநீர் தேங்கிய நிலையில் விஷவாயு வெளிப்பட்டு 5 தொழிலாளர்கள் மயங்கிய நிலையில் உள்ளனர்.

Exit mobile version