டெல்லி, மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடைத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று டெல்லியில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் ரயில்வே சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரோடு-பழனி ரயில் தாராபுரம் வழியாக இயக்கப்படுவது குறித்தும் இதனால் சுற்றுலா வளர்ச்சி அடையும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல, புண்ணிய தளங்களை இணைக்கும் வகையில் வாரணாசியில் இருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு விரைவு ரயிலை இயக்க கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் திட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாகவும், தமிழகத்தில் ரயில்வே துறையை மேம்படுத்த அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்ததாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.