செலுத்தப்படாத கடன்… ஒய்.ஜி.மகேந்திரன் மகள் வீட்டிற்கு சீல்

வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்துஜா பைனான்ஸ் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீனஸ் காலனியில் மது வந்தி வீடு வாங்கியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வாங்கிய கடன் வட்டி மேல் வட்டி சேர்ந்து தற்போது ரூ.1.21 கோடியாக வளர்ந்துள்ளது. இந்த கடனை திரும்ப செலுத்தாததால், மதுவந்தி வீட்டிற்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து, வீனஸ் காலனியில் ஆஷ்னினா என்ற அப்பார்ட்மென்டில் உள்ள மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version