ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்க வேண்டும் என உத்தரபிரதேச மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் மனு தாக்கல் செய்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த பயங்கர சமத்துவத்தை அனைவரும் அறிவோம். இதற்கு முன் நடந்த கற்பழிப்பு வழக்குகள் போலவே இதுவும் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கும் பலர் குரல் கொடுத்த வருகின்றனர். இதனால் அந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த பெண்ணின் உடலை இரவோடு இரவாக சொந்த ஊர் கொண்டு வந்த உ.பி., போலீசார் தகனம் செய்தனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடும் போராட்டங்கள் வெடித்தன. அதன் அடிப்படியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்கள் வழக்கு தற்போது சி.பி.ஐ. க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உபி., அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் கூறியுள்ளதாவது : ஹத்ராஸில் இளம்பெண் பலாத்கார வழக்கை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ.,விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். இந்த வழக்கில் மாநில அரசின் நற்பெயரை கெடுக்க தவறான பிரசாரம் நடக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடப்பதை தடுக்க தீய சக்திகள் விரும்புகின்றன. லட்சக்கணக்கானோர் கூடி போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட திட்டமிடப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. இதனால் வன்முறையை தடுக்கவே, இரவோடு, இரவாக இளம்பெண்ணின் உடல் பெற்றோர் சம்மதத்துடன் தகனம் செய்யப்பட்டது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.