சித்தியை தேடும் அமெரிக்கர்கள்?

விரைவில் நடக்கவிருக்கும் அமெரிக்கா தேர்தலுக்கு ஜோ பிடன் கட்சி சார்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட(இவரின் அம்மா சென்னையில் பிறந்தவர்) கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரிஸ் தனது உரையின் போது சென்னையில் பிறந்து வளர்ந்த தனது தாய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.

இதைப்பற்றி அவர் கூறுகையில், “இந்த நேரத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து அமெரிக்கா வந்த எனது தாய் ஷியாமலா குறித்து நினைவு கூர்ந்தார்.தனது 19 வயதில் மருத்துவம் படிப்பதற்காக அமெரிக்கா வந்தவர் எனது தாய் ஷியாமலா என்றும். அவரின் தோள்களில்தான் நான் நின்றுக்கொண்டிருக்கிறேன். குடும்பம், குடும்ப உறவுகள், சமுதாயக்கடமை குறித்து எனது தாய் எனக்கு சிறுவயது முதல் கத்துக்கொடுத்துள்ளார் என நெகிழ்ச்சியாக கூறினார்.

கமலா ஹாரிஸ்

தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ் தன் பேச்சுக்கிடையில், குடும்ப உறவுகள் குறித்துப் கொண்டு இருந்த போது, ‘சித்தி’ என்று தமிழில் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் இந்திய மொழியில் அதுவும் தமிழில் ‘சித்தி’ என்று குறிப்பிட்டது, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் குறிப்பாக, தமிழர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கமலா ஹாரிசின் இந்த பேச்சு டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. மேலும், அமெரிக்கர்கள் பலரும் , ‘சித்தி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை இணையதளத்தில் தேடி வருகின்றனர்.

Exit mobile version