ஊதியக் குறைப்பு செய்த முதலாளியை கொலை செய்த தொழிலாளி…

கொரோனா நோய் பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது இதனால் உலகம் முழுவதும் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன.

அதனால் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ஊதியக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன, இதனால் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 21 வயது இளைஞரான தஸ்லீம், டெல்லியில் பால் விவசாயியாக இருக்கும் ஓம் பிரகாஷ் என்பவரின் வீட்டில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பால் ஊதியத்தை குறைக்கவிருப்பதாக தஸ்லீமின் முதலாளியான ஓம் பிரகாஷ் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் வந்துள்ளது. இந்நிலையில் ஓம் பிரகாஷ் தூங்க சென்ற போது, தஸ்லீம் அவரது தலையில் கட்டையை வைத்து பலமாக தாக்கியுள்ளார். அதன் பிறகு கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை ஒரு சாக்குப்பையில் போட்டு கிணற்றில் தூக்கி எறிந்துள்ளார். இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.

ஓம் பிரகாஷை காணவில்லை என்று குடும்பத்தினர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காவலர்களிடம் தெரிவித்தனர், அப்போது காவலர்கள் கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டனர் அந்த சடலம் ஓம் பிரகாஷ் என்பதை குடும்பத்தினர் உறுதி செய்தனர். அதன்பிறகு இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் தஸ்லீமை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version