கோவையில் கொரோனா நோய் தாக்கம் அதிகரிப்பு!

கோவையில் கொரோனா நோய் தாக்கம் மெல்ல அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிகளவில் கொரோனா தாக்கம் காணப்பட்டதால் தடுப்பூசியும் அதிகமாக தேவைப்பட்டது.ஆனால் தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு காரணமாக தட்டுப்பாடு நிலவியதால் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது போதுமான அளவில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.அதன்படி ஊரக பகுதிகளில் 52 முகாம்களில் 19500 தடுப்பூசிகளும், மாநகர பகுதிகளில் 66 மையங்களில் 26400 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும் மாவட்டம் முழுவதும் 24 சிறப்பு முகாம்களில் 18 ஆயிரத்து 410 தடுப்பூசிகளும் இடப்படுகின்றன.கொரோனா பரவல் மூன்றாம் அலை விரைவில் துவங்கும் என கூறப்படும் சூழலில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதார துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

Exit mobile version