நான் பகிர்ந்தது போட்டோஷாப் புகைப்படமா? வானதி சீனிவாசன் விளக்கம்!!

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை இணைத்து ஒரு ட்வீட் செய்திருந்தார்.

அதில், “பாஜக குடும்ப உறுப்பினர்களுடன் டெல்லி தலைமை அலுவலகத்தில்” என்று தலைப்பிட்டு ஒரு குழு படத்தையும் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தில் பா.ஜ.க மூத்த உறுப்பினர்களுடன் வானதி சீனிவாசனும் இருந்தார்.

ஆனால், அது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்று சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியது. பார்த்தாலே போட்டோஷாப் என அப்பட்டமாக தெரிந்தது. மேலும், பா.ஜ.க மூத்த உறுப்பினர்கள் பதிவிட்ட அதே குழு படத்திலும் வானதி சீனிவாசன் இல்லை.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் மழை பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடச் சென்றபோது முழங்கால் அளவு இருந்த தண்ணீரில் போட்டில் சென்றது போல வெளியான வீடியோ மக்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்தப் புகைப்படமும் சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளானது.

“வானதி சீனிவாசன் போட்டோஷாப் செய்து, அந்தப் படத்தை ட்வீட் செய்திருக்கிறார்” என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர். அதன் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள வானதி சீனிவாசனை தொடர்பு கொண்டோம்.

“நான் அப்போது டெல்லி சென்றிருந்தது உண்மைதான். குழு படம் எடுக்கும்போது நான் சற்று தாமதமாகச் சென்றேன். அதற்குள் பலர் பஸ்ஸில் ஏறிவிட்டனர். எல்லோரும் ஒன்றாகத்தான் பஸ்ஸில் ராஷ்டிரபதி பவன் சென்றோம். ஒரு நினைவுக்காக, போட்டோகிராபர் என்னை தனியாக போட்டோ எடுத்து, குழு படத்துடன் இணைத்துக் கொடுத்தார்.” என போட்டோஷாப் புகைப்படத்திற்கு விளக்கம் அளித்தார்.

Exit mobile version