நாளை தொடங்குகிறது சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை

சென்னை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை 8-ஆம் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் துவங்கி வைக்கிறார். இந்த ரயில் சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியே கோயம்புத்தூர் வரை இருமார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயிலின் முன்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. அதில் ரயிலில் உணவுடன் சேர்ந்து குளிர்சாதன பயணச் சீட்டின் கட்டணமாக ரூ.1,215 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் உணவு இல்லாமல் என்றால் ரூ.1,057 கட்டணம் செலுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version