சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படுபவர் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் ஒரே பெயர் வனிதா விஜயகுமார்தான்.

வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை கடந்த 27-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்தில் இருந்து சர்ச்சைகள் பெரும் அளவில் கிளம்ப ஆரம்பித்தன பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார். இதுகுறித்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதா – பீட்டர் பால் தம்பதியினர் சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகின .
இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்க பதிவில், “நேற்றைய தினத்தை(24.08.2020) என்னால் மறக்கவே முடியாது. கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் எங்களுக்கு இந்த சோதனையைக் கொடுத்து வருகிறார். எங்கள் காதல் வலிமையானது. நிச்சயம் அதிசயம் நடக்கும். அவருக்காக நானும் எனக்காக அவரும் எப்போதும் இருப்போம்.என்று பதிவிட்டுள்ளார்.