வாடிவாசலுக்கு பிறகு விஜய் தான் எனது டார்கெட் -இயக்குனர் வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை :

இயக்குனர் வெற்றிமாறன் 2007 ல் பொல்லாதவன் தொடங்கி,கடைசியாக வெளிவந்த அசுரன் வரை தனது வித்தியாசமான கதைக்களத்தால் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கைவசம் வைத்துள்ளார்.இவர் இயக்கிய ஆடுகளம் தேசிய விருதையும் பெற்றது.இதையடுத்து,காமெடி நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தையும்.நடிகர் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார்.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் வெற்றி மாறன் ஆவலாக உள்ளார் .இதுகுறித்து ஒரு மீடியா சேனல் அவரிடம் கேள்வி எழுப்பியப்போது அதற்கு விடையளித்த வெற்றிமாறன் .நான் விஜய்க்காக கதை எழுத ஆரம்பித்துவிட்டேன் அவரது ஒரு அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version