ஏ.எல் விஜயின் அடுத்த படம்!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’. இந்தபடத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிகிறது. இப் படத்தின் டீசரானது சமீபத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களின் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்திருக்கிறார்.அவர் டப்பிங் செய்யும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

Exit mobile version