சர்ச்சை கருத்தை வெளியிட்டு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா சிக்கலில் மாட்டியுள்ளார்.
தெலுங்கில் குறுகிய காலத்தில் அதிவேகமாக வளர்ந்து முன்னணி நடிகரானவர் விஜய் தேவரகொண்டா. இவரது அர்ஜுன் ரெட்டி, கீத கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. தமிழில் நோட்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்நிலையில் அண்மையில் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது சர்ச்சையான கருத்தை வெளியிட்டார்.
அதில், “எல்லோருக்கும் ஓட்டுரிமை அளிப்பதும் சரியல்ல. அரசியலில் யார் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை மக்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்கிறார்கள். அரசியல்வாதிகள் ஓட்டுகளை பணம் கொடுத்தும், சாராயம் கொடுத்தும் வாங்கி விடுகின்றனர். பணம் இருப்பவர்களுக்கு ஓட்டுரிமை தேவை இல்லை. நடுத்தர மக்களுக்கு, படித்தவர்களுக்கு பணத்துக்கு விலை போகாதவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்க வேண்டும். நிறைய பேர் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பது தெரியாமலே போடுகிறார்கள்.
எனவே எல்லோருக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது. நமது சமூகத்தில் மாற்றம் வரவேண்டுமானால் சர்வாதிகார ஆட்சி இருக்க வேண்டும். அந்த சர்வாதிகாரி நல்லவராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் தேவரகொண்டா இவ்வாறு கூறியதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.