முதல்வன் படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன்? 21 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை பகிர்ந்த ஷங்கர்!

முதல்வன் படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன் என 21 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து பேசியுள்ளார்

1999ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் முதல்வன். இந்தப் படத்தில் அர்ஜூன் லீடிங் ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன் என 21 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளார் ஷங்கர். முதல்வன் படத்தில் முதலில் லீடிங் ரோலில் நடிக்க ஷங்கரின் சாய்ஸாக இருந்தது நடிகர் விஜய் தானாம்.

ஆனால் அது வொர்க் அவுட் ஆகாததால் தன்னுடைய ஜென்டில்மேன் ஹீரோவான அர்ஜூனை நடிக்க வைத்துள்ளார் ஷங்கர். அரசியல் த்ரில்லர் படமான முதல்வன் படம் சிறந்த விமர்சனங்களை பெற்று பின்னர் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

இந்நிலையில் ‘முதல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய் ஏன் நிராகரித்தார் என்பதை இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து பேசியுள்ளார். ‘முதல்வன்’ படத்திற்காக விஜயை நடிக்க ஷங்கர் தனது குருவும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரை தன்னுடைய அசோசியேட் மூலம் அணுகியுள்ளார் ஷங்கர்.

ஆனால் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சரியாக நடக்கவில்லை. பின்னர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் சிறந்த வாய்ப்பை இழந்ததைப் பற்றி கவலைப்பட்டார், ஷங்கரிடம் அவருடன் நேராக விவாதித்திருக்க வேண்டும் என்று கூறினாராம். இதனை தொடர்ந்து இந்தியில் மெகா ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வன் படத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாய்ப்பை இழந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டாரே என உச்சு கொட்டி வருகின்றனர்.

Exit mobile version