’’மாஸ்டர்’’ படத்தைப் புகழ்ந்த விஜய்… ’’மாஸ்டர் பீஸ்’’ எனப் பாராட்டிய விஜய் சேதுபதி….உற்சாகத்தில் லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் படத்தைப் பார்த்து லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார் விஜய்.

மாஸ்டர் படத்தைப் பார்த்து லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார் விஜய்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருபவர் விஜய். இவரது ஒவ்வொரு படங்களையும் அவரது ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பார்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய் , விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ்  கனகராஜ் இயக்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இப்படத்தின் ரிலீஸ் தேதி கொரொனா காலம் நிலவுவதால்  தள்ளிப்போய்க் கொண்டேயிருக்கிறது.

இப்படம் ஓடிடி தளத்தில் வெளிவருமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இதுகுறித்த வதந்திகள் வெளியான நிலையில் இப்படம் தியேட்டரில்தான் வெளியாகும் என ,லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தைச் சமீபத்தில் பார்த்த நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜை அழைத்து மாஸ்டர் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது என்று பாரட்டியுள்ளார்.

எனவே அடுத்த படம் ஏ.ஆர்.முருகதாஸுடன் முடித்துவிட்டு விஜய் மீண்டும் லோகேஷுன் படத்தில் நடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு  எழுந்துள்ளது.

அதேபோல் விஜய் சேதுபதி மாஸ்டர் மாஸ்டர் பீஸ் என்று பாராட்டியுள்ளது குறிப்பிடத்தகக்து.

Exit mobile version