“உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் ஏசுபிரான் மீண்டும் பிறந்து மனதில் மகிழ்ச்சி பெற வாழ்த்துகிறேன்”… பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், நாட்டில் இன்னல் நீங்கி சகோதரத்துவம் தழைத்தோங்க ஒற்றுமையோடு செயல்பட்டு அன்பை பரிமாறும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
உலகில் மனித குலத்திற்கு நற்பண்புகளை போதித்த இயேசு பிரானின் பிறந்த நாளான இன்று அனைத்து மக்களும் அவர் கூறிய நல் எண்ணங்களை மனதில் கொண்டு அன்பு கருணை ஒற்றுமையோடு செயல்பட்டு சகோதரத்துவத்தை பரிமாறுவோம். உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் ஏசுபிரான் மீண்டும் பிறந்து மனதில் மகிழ்ச்சி பெற வாழ்த்துகிறேன்.
நாட்டில் பரவி வரும் நோய் தொற்றிலிருந்து அனைத்து மக்களும் விரைவில் விடுதலை பெற இந்நாளில் அனைவரும் இயேசு பிரானை பிரார்த்திப்போம். எனத் தெரிவித்துள்ளார்.