கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட “விஜயா மருத்துவமனை”மீண்டும் திறப்பு…

கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இதில் அதிகம் பாதிக்க படுபவர்கள் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், போலீசார், துப்புரவு தொழிலாளர்கள், செய்தியாளர்கள் இவர்களில் மேலும் பாதிக்க படுபவர்கள் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் மருத்துவ பணியாளர்களே, அந்த வகையில் சென்னை வடபழனியில் உள்ள “விஜயா மருத்துவமனையில்” பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது.

இதில் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது.இதனையடுத்து மருத்துவமனை உடனடியாக மூடப்பட்டது. கிருமி நாசினி கொண்டு மருத்துவமனை சுத்தம் செய்ய பட்டதையடுத்து மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. தற்போது புற நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு இயங்குகின்றன. விரைவில் அனைத்து பிரிவுகளும் செயல்பாட்டுக்கு வரும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version