கேப்டன் விஜயகாந்த் சிங்கம்போல் மக்கள் முன் வருவார்…மகன் விஜயபிரபாகரன் நம்பிக்கை !

கேப்டன் விஜய்காந்த் சிங்கம்போல் வருவார் என்று அவரது மகன் விஜயபிரகாரன் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விஜய்காந்த் சிங்கம்போல் வருவார் என்று அவரது மகன் விஜயபிரகாரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்தவர் விஜயகாந்த். இவர் அரசியலுக்கு வந்த குறைந்த காலத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு ஏற்றார்.

ஆனால் அவருக்கு கண்பார்வைக் குறைபாடும் சரியான தூக்கமில்லாத காரணத்தால் அரவது உடல்நலம் மற்றும் குரல்வளம் பாதிக்கப்பட்டது. அதற்காக அவர் அமெரிக்கா  சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி அதிமுடவுன் கூட்டணி வைத்தாலும் அவர்களால் ஒருதொகுதியில்கூட ஜெயிக்கமுடியவில்லை.

எனவே இம்முறை அடுத்த வருடம் வரவுள்ள சட்டமன்றத்தேர்தலில் தேமுதிக கூட்டணியாக தனித்து களமிறங்குகிறதா என்று முடிவாகவில்லை இருப்பினும், விஜயகாந்த் அடுத்து என்ன முடிவெடுப்பார் என்று தெரியாத நிலை உள்ளது.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் விரைவில் உடல்நலம் குணமாகி, சிங்கம்போல கர்ஜித்து வருவார் என்று அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளது அவரது கட்சித் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version