தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் படுகிறார்…

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தநிலையில் கடந்த 22-ஆம் தேதி அவர் உடல்நல குறைவு காரணமாக ராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. வின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்ததுள்ளது இதனையடுத்து அவர், கணவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு உள்ள அதே ராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று ராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- விஜயகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவருக்கு நோய் தொற்று அறிகுறி இல்லை என்றும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான பிரேமலதா விஜயகாந்தின் உடல்நிலையும் சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version