நடிகர் விஜய்சேதுபதிக்கு கவிஞர் தாமரை கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கபெ.ரணசாமி என்ற படம் ஒடிடி தளத்தில் வெளியானது.
இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படம் 800. உலகக் கிரிக்கெட் ஜாம்பாவான்களின் வரிசையில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் முத்தையா முரளிதரன்.இவரது பயோபிக் பிக்சர் 800 என்ற தலைப்பில் உருவாகவுள்ளது. இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.ஆனால் இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. முரளிதரன் இலங்கை போரின் போது,சிங்கள ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்தது ஒரு காரணம்,
இவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தியது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. அதனால் இப்படத்திற்கு 800 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை, தனது முகநூல் பக்கத்தில் ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். அதில், நீங்கள் முத்தைய முரளிதரன் படத்தில் நடிப்பதற்குப் பதிலாக பிரபாகரன் படத்தில் நடியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.