5கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க வேண்டுமா?

வானியல் ஆர்வலர்களுக்கு இந்த வாரம் திருவிழா தான். ஒரே நேரத்தில் 5 கிரகங்கள் வானத்தில் தெரியப்போவதால் ஒரே குஷியில் இருக்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு மென்மேலும் அழகு சேர்க்கும் விதமாக 6800வருடங்களுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வரும் வால் நட்சத்திரத்தையும் இந்த வாரத்தில் காணலாம். இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஒரே நேரத்தில் அமைவது மிகவும் அரிதானது. வானியலாளர்களுக்கும் வானியல் ஆர்வலர்களுக்கும் இந்த வாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.

எதையெல்லாம் நான் பார்க்கமுடியும்?

தற்போதைய சூழ்நிலையில் சனி மற்றும் வியாழன் கிரகங்கள் இரவு வானில் தெளிவாக பிரகாசமாக தெரியும். இவை ஒன்றுக்கு அருகில் ஒன்றாக தென்படும்.

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய், சனி மற்றும் வியாழன் கிரகங்களிடம் இருந்து சற்று விலகி காணப்படும்.

வெள்ளி கிரகம் தான் மிகவும் எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய கிரகம். பூமிக்கு அருகில் இருப்பதால் மிகப் பிரகாசமாக தெரியும் கிரகம் இதுவாகத்தான் இருக்கும்.

மெர்குரி எனப்படும் புதன் கிரகம் வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் நாம் பார்க்கும் வகையில் தென்படும். அவற்றை அதிகாலை பொழுதுகளில் சற்று எளிதாக பார்க்கலாம்.

சனி, வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களை எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் ஐந்து கிரகங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டுமென்றால் அதிகாலை 4.30 மணி சரியானதாக இருக்கும்.

அதனுடன் நியோவைஸ் வால் நட்சத்திரத்தையும் நீங்கள் 22ம் தேதிக்குள் பார்க்கலாம். அதை எப்படி பார்க்க வேண்டும் என தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version