சூப்பர் ஸ்டார் ரஜினியின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக நிற்போம் – தமிழருவி மணியன்

ரஜினியின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக நிற்போம் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக நிற்போம் – தமிழருவி மணியன்

இந்திய அரசியலில் என்ன மாற்றம் வந்தாலும் வராவிட்டாலும்கூட நம் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி எப்போது அரசியல் கட்சியை ஆரமிகப்போகிறார் என்ற ஆர்வம் இந்தியாமுழுவதிலுமுள்ள அரசியல்வாதிகளிடம் மேலோங்கியுள்ளது.

அதில்லையென்றாலும் ரஜினியின் ரசிகர்கள் மற்றும் ரஜினி மன்றத் தலைவர்களும் உறுப்பினர்களும் எதாவதொரு போஸ்டர் ஒட்டி திடீரென்று பரபரப்பு ஏற்றுவார்கள்.

இது தமிழக அரசியல் நிலவரம் என்றாலும் அடுத்த வருடம் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ரஜினி போட்டியிடுவாரா இல்லயா எனது பெரும்கேள்விக்குறியாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் எப்படியும் அவர் கட்சி ஆரம்பித்து அதில் முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டுமெனக் குரல் கொடுத்துள்ளனர்.

ஆனால் முதல்வர் பதவி மீது ஆசையில்லை என்று ரஜினி ஓபன் டாக்காகச் சொல்லிவிட்டார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,இன்று காந்தி பிறந்த நாளில் காமராஜர் மறைந்த நாளில் இந்த இருவர் கனவுகலை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினியின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

ரஜினி இனியாவது கட்சி ஆரம்பிப்பாரா என்று பார்ப்போம்!

Exit mobile version