மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
மெரினா கடற்கரை
சென்னையில் மெரினா கடற்கரையில் உள்ள கடைகளுக்கான டெண்டர் தொடர்பான வழக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரையை தமிழக அரசு திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றமே முடிவெடுக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
எப்போது அனுமதி?
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டனர்.
அறிக்கை
மெரினாவில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில், 900 தள்ளுவண்டிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், லூப் சாலை மற்றும் மீன் சந்தைகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.