பாலியல் பலாத்காரம் செய்யும் போது பெண்கள் அனுபவித்து மகிழ வேண்டும் : காங்., எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை… கைதட்டி சிரித்த சக எம்எல்ஏக்கள்!!

பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவில்லையெனில், அதனை பெண்கள் அனுபவித்து மகிழ வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சட்டப்பேரவையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று வேளாண் பயிர்கள் பாதிப்பு மற்றும் இழப்பீடு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான ரமேஷ்குமார், “பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், அதனை தடுக்க முடியாவிட்டால், அதை சுகமாக அனுபவிக்க வேண்டும் என்கிற பழமொழி ஒன்று உள்ளது. இதே நிலையில்தான் நான் இருக்கிறேன்,” என்று பேசினார். அவரது இந்தப் பேச்சைக் கேட்ட சக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைத்தட்டி சிரித்து மகிழ்ந்தனர். சபாநாயகரும் சிரித்துக்கொண்டே, “உங்கள் அனுபவத்தை வரவேற்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏவின் இந்தப் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தான் கூறிய கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமார் மன்னிப்பு கோரி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கர்நாடாக மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2021 மே மாதம் வரை 1,168 பாலியல் வன்கொடுமை வழங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version