கொரோனா தொற்று பரவும் நிலையில் அவசரமாக ஊரடங்கு தளர்த்துவது பேரழிவு -உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனம் கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஊரடங்கு தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவா:

சீனாவில் உகான் நகரில் கடந்த வருடம் இறுதியில் கண்டறியபட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தியது இந்த கொரோனா தொற்றை எதிர்கொள்ள இதுவரை எந்த ஒரு தடுப்பு மருந்துகளோ,தடுப்பூசிகளோ கண்டறியப்படவில்லை.அனைத்து நாடுகளும் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தொற்றை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.ஆனால் பல மாதங்களாக இந்த ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நாடுகளின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் ஆகியவை திண்டாட்டம் ஆகிவிட்டது.

எனவே பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வருகிறது.மேலும் சில நாடுகள் மொத்தமாகவே ஊரடங்கை முழுமையாக நீக்கியும் விட்டது.மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினாலும் இன்னும் இந்த கொரோனா தாக்கம் குறைந்த பாடு இல்லை.இதனை கருத்தில் கொண்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதன் இயக்குனர் டெட்ரோஸ் கூறிருப்பதாவது:

கொரோனா தொற்றுக்கு மத்தியில் அவசரமாக ஊரடங்கு தளர்த்துவது பேரழிவு வழிவகுக்கும்.ஊரடங்கை தளர்த்துவதில் தீவிரம் காட்டும் நாடுகள் ஏன் வைரஸ் பரவுதலை தடுப்பதை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.இது ஒரு சாத்தியமற்ற சமநிலை ஆகும்.

நாடுகள்,சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு.பாதிப்புக்குளான குழுக்களை பாதுகாத்து கொத்தாக செழித்து வளரும் வைரஸை அழிக்க வேண்டும்.மக்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டும்.மேலும் தொற்றுள்ளவர்கள் கண்டுபிடித்து தனிமை படுத்துதல்,பரிசோதித்தல் ,அவர்களின் தொடர்புகளை கண்டறிந்து தனிமை படுத்துதல் போன்றவற்றை செய்தல் வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு நாடுகளின் சுகாதார அமைப்புகளின் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை கண்டறிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ள பட்டு, இதில் 105 நாடுகள் பதிலளித்து உள்ளன.இந்த ஆய்வின் முடிவில் 90 சதவீத நாடுகள் இந்த கொரோன தொற்றால் தங்கள் சுகாதார அமைப்பு பாதிப்புப்படைந்துள்ளது.மேலும் வழக்கமான நோய்த்தடுப்பு மற்றும் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது .

ஆய்வில் பங்கேற்ற கால்பங்கு நாடுகள் தங்கள் அவசர கால சேவைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,70 சதவீத நாடுகளின் இடையூறுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.கடந்த மார்ச் மற்றும் ஜூன் இடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வு,தற்போதைய கொரோனா போன்ற சூழலை எதிர்கொள்வதற்கு சிறந்த சுகாதார அமைப்பை வைத்திருக்க வேண்டிய தேவையை வெளிப்படுத்தி வருகிறது என்று டெட்ரோஸ் கூறியுள்ளார்.

Exit mobile version