யூடியூபர் மாரிதாஸ் போலீசாரால் கைது..!

காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது.

முதுகுளத்தூரை சேர்ந்த மணிகண்டன் இறந்த வழக்கில் காவல்துறையை விமர்சித்ததாக மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூபர் மாரிதாஸை கைது செய்ய சென்றபோது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தனர்.

Exit mobile version