இரவில் நன்றாகத் தூங்க வாழைப்பழ டீ!!!

இரவில் நல்ல தூக்கத்தைப் பெற, வாழைப்பழ டீ எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க…

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் முக்கியமானவை உணவு, உடை, வீடு, பணம் இப்படி நிறைய இருக்கு.இவை எல்லாத்தையும் தாண்டி மிக முக்கியமானது, தூக்கம் தாங்க.சிலருக்கு வாழத் தேவையான எல்லாமே இருக்கும், ஆனா நைட்-ல தூக்கமே வர மாட்டேங்குதுனு புலம்புவாங்க.அப்படி புலம்புரவங்களுக்கு ஒரு தீர்வு தான் இந்த டீ…   

எல்லாருக்கும் தெரிந்த, ஈசியா கிடைக்கக் கூடிய, அதிக சத்தான, இனிப்பு சுவைக் கொண்ட, மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்று தான், வாழைப்பழம்.இந்த பழத்தை பிடிக்காதவங்கனு யாருமே இருக்க மாட்டங்க.குழந்தைகள் முதல் பல்லு போன பாட்டி வரை, எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்ச பழம்-னா அது வாழைப்பழம் தான்.

இந்த வாழைப்பழத்தை, நாம் எப்பவுமே பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, வாழைப்பழ தோலை தூக்கி எறிகிறத தான் பழக்கமா வச்சிருப்போம்.ஆனா முழு  வாழைப்பழத்தையும் (தோலோடு) பயன்படுத்தி ஒரு சூப்பரான டீ செய்யலாம்னு எத்தனைப் பேருக்குத் தெரியும்.

தூக்கப் பிரச்சனை இருக்குறவங்க, தூங்க போகுறதுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்த டீ-யை எடுத்துக்குறபோது, அது  நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, உடல் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லத் தயாராக உதவுது.

இப்படி நிம்மதியான தூக்கத்தை கொடுக்குற டீ எப்படி செய்வதுனு பார்ப்போமா…

டீ செய்ய தேவையானவை

செய்முறை

வாழைப்பழத்தோட 2 முனைகளையும் வெட்டிடுங்க.அது வேண்டாம்.வாழைப்பழத்தை ஒரு சில துண்டுகளாக நறுக்கி, அதனுடன் ஏலக்காய் சேர்த்து, ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்.இதனுடன் பட்டை பொடி சேர்த்து, பின்னர் அதை வடிகட்டி குடிக்கவும்.அவ்வளவு தான், டீ ரெடி.

குறிப்பு

இந்த டீ-யைக் குடிங்க…நிம்மதியா தூங்குங்க!!!

Exit mobile version