இதையெல்லாம் தினமும் உணவில் எடுத்துக்குறீங்களா?

நோய் தொற்றுக் காலத்தில, என்னவெல்லாம் சாப்பிட்டா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்னு பார்க்கலாம்.  

கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே தான் இருக்குது.அதனால, என்னல்லாம் சாப்பிட்டா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும், எப்படி குழந்தைகளையும், நம்ம வீட்டுல இருக்குற பெரியவங்களையும் பாதுகாக்க முடியும், இது தான் இப்ப பலரோட கேள்வியா இருக்குது.அதுக்கு ரொம்பல்லாம் யோசிச்சிட்டு இருக்காதிங்க.தினமும் சில பொருள்களை உணவில் சேர்த்தாலே போதும்.இல்லனா, வாரம் ஒரு முறையாவது சுழற்சி முறையில உணவில கீழே கொடுக்கப்பட்டதை எல்லாம் சேர்த்தாலே போதும்.அது என்னனு பார்ப்போம் வாங்க.

இஞ்சி

இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குறதுல முதன்மையானது.இது சுவாச பிரச்சனைகள் மற்றும் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள்ல இருந்து ஈசியா விடுதலை தரும். இது புற்றுநோய கூட சரி செய்யும்.உடல் எடையை குறைக்குறதுல இது தான் பெஸ்ட்.பெரியவங்க தினமும் இஞ்சி டீ எடுத்துக்குறது ரொம்ப நல்லது.குழந்தைகளுக்கும் இஞ்சி டீ கொடுத்து பழக்குங்க.இல்லனா முடிஞ்ச மட்டும் எல்லா குழம்புகளிலும் இஞ்சி பேஸ்ட் சேர்த்துக்குங்க. குழந்தைகளும் சாப்ட்டுருவாங்க.

மஞ்சள்

மஞ்சள் ரத்தத்தை சுத்தம் செய்றது மட்டுமில்லாம, சளி தொந்தரவையும் நீக்குது.வெறும் வயிற்றில மஞ்சள் எடுத்துக்கிட்டா வயிறு சுத்தமாகிடும்.தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணில மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வார வறட்டு இருமல் காணாமப்போய்டும்.

முட்டை

முட்டையில் புரதச்சத்து இருக்கு.அதனால, ஒரு நாளைக்கு குறைந்தது 2 முட்டையாவது எடுத்துக்கனுமாம்.இரவில மட்டும் முட்டைய சாப்பிட வேண்டாம். முட்டையில  நல்ல கொழுப்புகள்தான் இருக்குனு ஒரு ஆய்வு முடிவுல தெரிய வந்திருக்கு.அதனால பயமில்லாம தினமும் 2 முட்டை காலை,மதிய உணவில எடுத்துக்கோங்க. சர்க்கரைநோய் இருப்பவர்கள் மட்டும் முட்டை சாப்பிடுவதில் கொஞ்சம் கவனமாக இருக்கனும்.

பருப்பு வகைகள்

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பச்சை பயறு, கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு, சிவப்பு காராமணி, தட்டை பயறு, உளுத்தம் பருப்பு இவை எல்லாம் பருப்பு வகை தான்.தினமும் ஒவ்வொறு பருப்பை உணவில சேர்த்துக்குங்க.பருப்பு வகைகள்ல புரோட்டீன் அதிகமா இருக்கு.இத சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு இவை எல்லாத்தோட தாக்கத்தில இருந்து தப்பிக்கலாம்.

பழ வகைகள்

பழங்களை ஜூஸாக சாப்பிடுறது தான் பலருக்கும் பிடிக்கும்.ஆனால், ஜூஸாக சாப்பிடுறதை விட பழமாக சாப்டுறதுதான் நல்லது.இதனால புத்துணர்ச்சியும் தெம்பும் கிடைக்கும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது ஒரு மணி நேரம் பின்பு பழம் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. தினமும் ஒரு வகையான பழம் என்று சாப்பிட்டாலே, வாரத்துல 7 வகையான பழங்கள சாப்ட்றலாம்.

நட்ஸ்

வால்நட், பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை இதெல்லாம் நோயெதிர்ப்பு சக்திய அதிகரிக்க உதவுது.உடல் எடையை குறைப்பது முதல், நீரிழிவு, இதய நோய் போன்றவற்றை வராமல் தடுக்கும் சக்தி நட்ஸிற்கு உள்ளது.குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உணவில நட்ஸை சேர்த்துட்டு வந்தா, அதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மூளையில் இரத்த ஓட்டத்தை சீராக வைச்சு, நரம்பு மண்டலத்தை பாதுகாத்து, ஞாபக மறதி வராமல் தடுக்கும்.

காய்கறிகள்

காய்கறிகள்ல அத்தியாவசிய சத்துக்களான பொட்டாசியம், நார்ச்சத்து, போலேட் மற்றும் வைட்டமின்கள்ல ஏ, ஈ மற்றும் சி போன்றவை அதிக அளவில் இருக்குது.இதை கட்லட், குருமா, கிச்சடி, ஃப்ரைடு ரைஸ் இப்படி விதவிதமா செஞ்சு குழந்தைகளுக்கு குடுத்தீங்கனா நல்ல தேவையான சத்துக்கள் எல்லாம் தினமும் கிடச்சிடும்.

இவை எல்லாத்தையும் உணவில சேர்த்துக்குங்க.நல்லா ஆரொக்கியமா வாழுங்க.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!

Exit mobile version