மன அழுத்தம் தலைமுடியைப் பாதிக்குமா?

மன அழுத்தம் இருப்பவர்களுக்கு, தலை முடி சாப்பிடும் பழக்கம் இருப்பது பொதுவானது. உடல் எடையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று, பல வித, ‘டயட்’ முறைகளை பின்பற்றினாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி கொட்டும்.

காரணங்கள் என்று பார்க்கும் போது, குடும்ப பின்னணியை முக்கியமாக பார்க்க வேண்டும். பரம்பரையாக மரபணுவில் இந்த தன்மை இருப்பதும் ஒரு காரணம். ஆண்களுக்கு, ‘டெஸ்டோஸ்டிரோன்’ என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரந்தால், தலையில் முடி உதிரும். உடலின் மற்ற பகுதிகளில் அதிக அடர்த்தியாக வளரும்.
சில பெண் குழந்தைகள், குறிப்பிட்ட வயதிற்கு முன், வயதிற்கு வந்து விடுவது, முடி உதிர்வை அதிகரிக்கும். போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும், தலைமுடி வழக்கத்திற்கு மாறாக, அதிக எண்ணிக்கையில் உதிரும்.

நீண்ட நாட்கள் சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு போன்ற உடல் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு, எப்படி, ‘கொரோனா’ வைரஸ் தொற்று ஏற்பட்டால், அதிக பாதிப்பு இருக்குமோ, அதே போன்று, நீண்ட நாள் உடல் பிரச்னை இருந்தால், முடி உதிரும்.
குழந்தை பெற்ற பின், அடுத்த சில மாதங்கள், தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், நீண்ட நாட்கள் கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டு, திடீரென நிறுத்தும் போது ஏற்படும் ஹார்மோன் தன்மை ஆகிய காரணங்களால், முடி அதிக அளவில் உதிரலாம்.
இது தவிர, தைராய்டு பிரச்னை, தலையில் பூஞ்சை தொற்று, சில தோல் நோய்கள், ‘ஆட்டோ இம்யூன் டிசீஸ்’ எனப்படும் நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களில், நம் உடலில் உள்ள செல்களை அழிக்கும் பிரச்னை இருப்பவர்களுக்கு, கேன்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது, தலைமுடி உதிரும்.

மன நோய்களுக்கு நீண்ட நாட்கள் மாத்திரை சாப்பிடுவதாலும் முடி உதிரலாம். சில மன நோயாளிகளுக்கு, தலையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட பகுதியில் தலைமுடியின் அளவு குறைந்து இருக்கும். இவர்கள், தங்கள் முடியை தாங்களாகவே பிடுங்கி அல்லது பாதி பாதியாக கைகளால் பிடுங்கி விடும் பழக்கம் உள்ளவர்கள்.இப்படி பிடுங்கிய முடியை, பலர் சாப்பிட்டு விடுவது உண்டு. இவர்கள் தலையில் மட்டுமல்லாமல் கண் இமைகள், புருவம் இவற்றில் இருக்கும் முடியையும் பிடுங்கி சாப்பிடுவர். குறிப்பிட்ட நாட்களுக்கு பின், வயிறு வலி என்று சொல்லும் இவர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்து பார்த்தால், வயிற்றில் கட்டியாக முடி உருண்டை இருக்கும்.


மன அழுத்தம் இருப்பவர்களுக்கு, தலை முடி சாப்பிடும் பழக்கம் இருப்பது பொதுவானது. உடல் எடையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று, பல வித, ‘டயட்’ முறைகளை பின்பற்றினாலும், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, முடி கொட்டும்.

Exit mobile version