மாஸ்க் அணிவதால் முகத்தில் கருமை கோடுகள் உண்டாகி அழகினை கெடுக்கிறதா? இதனை மறைக்க வீட்டிலேயே செய்யும் வழிமுறைகள் உங்களுக்காக!

கொரோனாவின் பாதிப்பு எப்போது அதிகமானதோ அப்பொழுதே மாஸ்க் நம் வாழ்வில் அத்தியாவசியமான பொருளாகவே மாறிவிட்டது. இதனால் ஏற்படும் கருமையான வளையங்களை வீட்டில் இருந்தே சரி செய்வதற்கான வழிமுறைகள் இதோ உங்களுக்காக…
mask
மஞ்சள் :

மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி. மாஸ்க்கினால் ஏற்படும் கருமை வளையங்களை சரி செய்யவும் இது உதவியாக உள்ளது.  ஒரு சிட்டிகை மஞ்சளுடன் 2 ஸ்பூன் தயிர் கலந்து அதை கோடுகள் இருக்கும் இடத்தை சுற்றி அல்லது முகம் முழுவதும் தடவி சுமார்  20-30 நிமிடங்கள் கழித்து இதனை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்துவரும் போது முகத்தில் ஏற்படும் கருமை நீங்கக்கூடும்.

கற்றாழை :

சோற்றுக்கற்றாழை சதையினை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு முகம் முழுவதும் தடவ வேண்டும். மஞ்சளைப்போன்று இதனையும் 20 நிமிடங்கள் காயவைத்து பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதுவும் மாஸ்க் பயன்படுத்துவதால் முகத்தில் ஏற்படும் கருமை கோடுகளை அகற்ற உதவியாக இருக்கும்.

பாதாம் :

பாதாம் கொட்டைகளுடன் தயிர் அல்லது பால் சேர்த்து கெட்டியாக கரைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து இதனை முகம் முழுவதும் ஸ்கிரப் செய்து வரும் போது கருமை வளையங்கள் முற்றிலும் நீங்க உதவியாக இருக்கும்.

Exit mobile version