ஆன்லைனில் பலவிதமாக சம்பாதிக்கும் வழியுண்டு. ஆன்லைனில் ரம்மி அல்லது வீடியோ கேம் விளையாடுவதன் மூலமும் சம்பாதிக்கலாம், அனைத்து ஆன்லைன் கேம்களிலும் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியாது. நிறையப் பித்தலாட்டங்களும், பண மோசடிகளும், ஏமாற்று வேலைகளும் அந்த விளையாட்டுக்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது,
ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கள் அனைத்துமே ஒரு சூதாட்டமே! கிட்டத்தட்ட பிதாமகன் படத்தில் லைலா சூர்யாவிடம் ஏமாறும் காட்சியை எல்லோரும் பார்த்திருப்பீர்கள் இல்லையா?? அதேபோல் தான் அனைத்து ஆன்லைன் கேம்களும் செயல்படுகிறது. முதலில் நீங்கள் விளையாட்டில் ஜெயிப்பதைப் போல் ஒரு பிம்பத்தைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பின் படிப்படியாக உங்களைத் தோற்கடித்து, கடைசியில் உங்கள் பணத்தையெல்லாம் இழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
இப்படி ஆன்லைனில் கேம் விளையாடுவதற்குப் பதிலாக, நீங்கள் ஒரு யூடியூப் க்ரியேட்டராக இருந்தும்கூட ஆன்லைனில் சம்பாதிக்கலாம். இரண்டிற்குமே முதலீடு என்பது பெரிதாகத் தேவையில்லை. ஆனால் நீங்கள் ஒரு யூடியூபராக இருந்து சம்பாதித்தீர்கள் என்றால் தவறில்லை.. ஆனால் ஆன்லைனில் ரம்மி விளையாடுவது, இல்லையென்றால் வீடியோ கேம் விளையாடி அதனை அப்படியே ரெக்கார்டு செய்து யூடியூப் ல் அப்லோடு செய்வது. இதுபோன்ற விஷயங்களின் மூலம் நீங்கள் சம்பாதிக்கிறீர்கள் என்றால், அது மதிக்கத்தக்க ஒரு விஷயம் இல்லை. ஏனென்றால் விளையாடுவதற்கும் படைப்பாளராக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
விளையாடுவதில் பணம் சம்பாதிப்பவர்கள் ஒன்று விளையாட்டில் ஜெயித்து அதில் வரும் பாயிண்ட்ஸ்களில் இருந்து பணம் ஈட்டுகிறீர்கள், அல்லது தாங்கள் விளையாடும் விளையாட்டு காட்சிகளை அப்படியே ரெக்கார்டு செய்து பதிவேற்றம் செய்து அதன் மூலம் பணம் ஈட்டுகிறீர்கள். ஆனால் இவை இரண்டில் எதனை செய்தாலும் சரி, நீங்கள் எதையும் புதிதாக உருவாக்கவில்லை என்பதை முதலில் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் விளையாடும் விளையாட்டில் ஒரு வர்ணனை இல்லை, திருத்தங்கள் இல்லை, கிராபிக்ஸ் இல்லை, மாற்றத்தக்க பொருள்கள் இப்படி எதுவுமேயில்லை. ஆதலால் அது ஒரு படைப்பாகாது. நீங்கள் ஆன்லைனில் கேம் விளையாடிகிறீர்கள் என்றால், அதில் உங்கள் படைப்பாற்றல் என்று எதுவுமே கிடையாது.
ஆனால் அதற்குப் பதிலாக ஒரு யூடியூப் படைப்பாளியை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் செய்யும் வேலை என்பது நீங்கள் கேம் விளையாடி சம்பாதிக்கும் வேலையைவிடக் கடினமானது. ஏனென்றால் பெரும்பாலான உண்மையான படைப்பாளிகள் யூட்யூப்பில் வீடியோ போடுவதற்கு ப்ரீ ப்ரொடக்ஸன், போஸ்ட் ப்ரொடக்ஸன் வொர்க்ஸ் என்று ஆயிரக்கணக்கான வேலைகளைச் செய்கிறார்கள், நீங்கள் விளையாடும் விளையாட்டைவிட அதிகமான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.
நீங்கள் ஒரு முப்பது நிமிடம் விளையாடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விளையாடுவதற்கு செலவிடும் அந்தநேரம் என்பது வீண்தான். ஏனென்றால் நீங்கள் அதன்மூலம் புதிதாக எதையும் நீங்கள் உருவாக்கவுமில்லை, கற்றுக் கொள்ளவும் இல்லை. ஆனால் நீங்கள் யூடியூபில் ஒரு முப்பது நிமிட வீடியோவை அப்லோடு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா..? முதலில் அந்தக் கண்டென்டை எடிட்டிங் செய்வதற்கு எடிட்டிங்க் சாப்ட்வேருக்குள் மாற்ற வேண்டும் அதற்குப் பின் தேவையான அனைத்து திருத்தங்களையும் செய்ய வேண்டும்..
அதற்கு பின்னர் வீடியோவிற்கான ஆடியோவை டியூன் செய்ய வேண்டும்: அதைத் தேவையான அளவிற்கு சுருக்க வேண்டும், நார்மலைஸ் செய்ய வேண்டும், நாய்ஸ் ரிடக்ஸன் செய்ய வேண்டும், வாய்ஸ் ஓவர் கொடுக்க வேண்டும்., இன்னும் இதுபோல் பேக்ரவுண்டில் பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. அதற்குப் பின்னர்தான் அந்த வீடியோவானது பதிவேற்றப்பட்டது. அதுமட்டுமில்லை, நீங்கள் உங்கள் வீடியோவுக்கு ஏற்ற தலைப்பு வைக்க வேண்டும், தேவையான குறிச்சொற்களை சேர்க்க வேண்டும்,அதற்கான விளக்கத்தை எழுத வேண்டும்.
நீங்கள் ஆன்லைனில் விளையாடுவது என்பதைவிட கடினமான வேலை அது.அந்த வேலையானது அத்தோடு இன்னும் முடிவடையவில்லை. இப்படி எல்லாவற்றையும் முடித்த பிறகு,
உங்கள் வீடியோக்களை நீங்களே விளம்பரப்படுத்த வேண்டும், ஏனென்றால் யூடியூப் பெரிய பெரிய படைப்பாளர்களை மட்டுமே ஊக்குவிக்கிறது. ஆகவே விளம்பரப்படுத்துவதற்கு அதற்காக கூடுதல் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நேரங்கள்கூடத் தேவைப்படலாம்.
இப்படி நீங்கள் உங்கள் க்ரியேட்டிவிட்டியைக் காண்பிக்க ஆன்லைனில் பல வழிகள் உள்ளது. ஆனால் நீங்கள் விளையாடி சம்பாதிப்பது என்பதில் உங்களுடைய திறமை, உழைப்பு, க்ரியேட்டிவிட்டி, அல்லது நீங்கள் புதிதான விஷயங்கள் கற்றுக் கொள்வது என்ற எதுவுமே கிடையாது. அதனால் விளையாடுவதற்காக நீங்கள் விரயமாக்கிய நேரமும் வீணாக்கப்பட்ட ஒன்றே,அதன் மூலம் உங்கள் நேரமும், திறமையும் முடக்கப்படுகிறதோ தவிர, வேறு எந்தவொரு நன்மையும் கிடையாது.
அதுமட்டுமில்லாமல் இப்போதுள்ள காலகட்டத்தில் களத்தில் இறங்கி விளையாடி ஜெயிக்கும் திறமையுள்ள நிஜமான விளையாட்டு வீரர்களுக்கே அவ்வளவு சீக்கிரம் அங்கீகாரம் கிடைப்பதில்லை, அவர்களே வேலை வாய்ப்பிற்குத் திணறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து நிறைய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால், பொருளாதார ரீதியாக இறுதிவரை ஜெயித்தவர்கள் என்பவர்கள் வெகுசிலரே. நிஜமான விளையாட்டு வீர்ர்களின் நிலைமையே அப்படியென்றால், நிழலோடு விளையாடிக் கொண்டிருக்கும் உங்கள் நிலைமையை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
அதேபோல் ஆன்லைன் விளையாட்டுகளின மூலம் நீங்கள் ஈட்டும் பணம் என்பது நிரந்தரமானதும் கிடையாது. நீங்கள் பொழுதுபோக்கிற்காக விளையாடுகிறீர்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் நீங்கள் விளையாடுவதை மட்டுமே நம்பி இருக்கிறீர்கள் என்றால் ,அது கண்டிப்பாக உங்களுக்கு நிரந்தரமான வருமானத்தைத் தராது. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வேலையிழக்கலாம்.
ஆனால் அப்போது நீங்கள் விளையாடுவதைத் தவிர வேறு எந்த புதிதான விஷயங்களும் கற்றுக்கொள்ளாமல் இருப்பதால் வேறுவேலை தேடிக்கொள்ள முடியாமல் கைவிடப்படுவீர்கள், என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அப்படியில்லை யென்றால் ஒரே மாதிரி விளையாட்டுகளைத் தொடர்ச்சியாக விளையாடுவதால் ஒரு கட்டத்தில் அவை வெறுப்பாகிவிடும், ஆனாலும்அப்போது உங்கள் பணத்தேவைக்காக வேறுவழியில்லாமல் நீங்கள் விளையாட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.அதனால் மன அழுத்தம் அதிகமாகி, நீங்கள் உங்கள் குடும்பத்தாரின் அன்பையும், ஆதரவையும்கூட இழக்கும் சூழல் உண்டாகலாம்.
இப்போது இந்த மாதிரி ஆன்லைன் கேமிற்கு அடிமையாகித் தற்கொலை செய்து கொண்டவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அதனால் மக்களே விளையாட்டு மோகத்திற்கு அடிமையாகி உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள்.! அதற்குப் பதிலாக உங்கள் கல்வியையும், திறமைகளையும்,வளர்த்துக் கொள்ளுங்கள், புதிதான விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.. அவை என்றும் உங்களைக் கைவிடாமல் காப்பாற்றும்!உங்கள் வழ்க்கையை செழிப்படையச் செய்யும்!
நன்றி🙏🙏