தலைமுடியை பராமரிக்க உதவும் ஹேர் மாஸ்க் மற்றும் ஹேர் ஆயில் !

பெண்களைப் பொருத்த வரை தலைமுடி உதிர்வு என்பது கொரோனா வைரஸ் போன்ற ஆபத்தான ஒன்று தான். எத்தனையோ விலை உயர்ந்த எண்ணெய் வாங்கி பயன்படுத்தினாலும் பலன் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நபர்களுக்கு இந்த டிப்ஸ் முக்கியமானதாக அமையலாம். முடி உதிர்வு பிரச்சனையால் தவிக்கும் பெண்களும் சரி ஆண்களும் சரி கருவேப்பிலை ஹேர் மாஸ்க் மற்றும் ஹேர் ஆயில் செய்து பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

எந்த ஒரு சிகிச்சையாக இருந்தாலும் சரி தொடர்ந்து 2 மாதம் செய்தால் தான் ரிசல்ட் கிடைக்கும். ஒருசில நாட்களில் ரிசல்ட் இல்லை என முயற்சியை கைவிட்டால் நிர்வாகம் பொருப்பல்ல.எல்லாமே நம் வீட்டில் எப்பொழுதுமே இருக்கக்கூடிய பொருள்கள் தான்.இப்ப ஹேர் மாஸ்க் மற்றும் ஹேர் ஆயில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஹேர் மாஸ்க்

கருவேப்பிலை இலைகளை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் போட்டு, பேஸ்ட் போல நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். காலை எழுந்ததும் தலையில் வேர்கால்களில் படும்படி நன்றாக கருவேப்பிலை பேஸ்டை தடவிக் கொள்ளலாம். அதன்பின் தண்ணீரில் தலையை அலசிவிட்டு ஷாம்பு கொண்டு வழக்கம் போல குளித்து விடலாம். வாரம் 2 முறை இப்படி செய்ய வேண்டும். அப்போது தான் ரிசல்ட் இருக்கும். முடி உதிர்வு நாளடைவில் குறைவதோடு, இளநரை ஏற்படாமல் தடுக்கும்.

ஹேர் ஆயில்

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ½ லிட்டர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில்  எண்ணெய்யை ஊற்றி சூடானதும், கருவேப்பிலை இரண்டு கை அதில் போட்டு, அடுப்பை நிறுத்திவிட வேண்டும். எண்ணெய் சூடு குறைந்ததும் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் மாற்றிக்கொள்ளலாம். இதில் கருவேப்பிலையை மிக்சியில் பொடி செய்தும் எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சிக் கொள்ளலாம். அது நம் விருப்பம் தான். ஒருசிலருக்கு எண்ணெய் நிறம் மாறினால் பிடிக்காது. அவர்கள் கருவேப்பிலையை அப்படியே போட்டுக் கொள்ளலாம். வாரம் இரண்டு முறை தலைக்கு குளிக்கும் முன் இந்த எண்ணெய்யை முடியில் தேய்த்து 2 மணி நேரம் ஊர வைக்கலாம். அப்படி இல்லையென்றால் முன்தினம் இரவே எண்ணெய் தேய்த்து ஊரவைக்கலாம். தேங்காய் எண்ணெய்க்கு பதில் இதை பயன்படுத்தலாம்.

மாஸ்க் மற்றும் ஆயிலை ஒன்றாக 2 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வு, வறட்சி, பொடுகு போன்ற பல பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.

Exit mobile version