அவனும்,நானும்!

அவன்“என் உயிருக்கு உயிரானவன்!

அவன்”என் மனதிற்கு மிக நெருக்கமானவன்!

ஒரு நிமிடம் கூட “அவன்” இல்லாமல் நான் இருந்ததே இல்லை!

என்னுடைய எல்லா ரகசியங்களையும் தெரிந்து வைத்திருப்பவன் “அவனே”!

ஒருநாள்கூட“அவன்” என்னை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசியதும் கிடையாது!

என் நிழலைப் போல் எங்கும் என்னைப் பின்தொடர்பவனும் “அவனே”!

நான் கோபத்தில் திட்டினாலும் அமைதியாக வாங்கிக் கொள்பவனும் அவனே!

நான் சோகத்தில் இருக்கும்போது ஆறுதலாக இருப்பவனும் அவனே!

எந்த சூழ்நிலைகளிலும் என்னைக் கைவிடாதவனும் அவனே!

நான் அடித்தாலும், உதைத்தாலும் என்மேல் கோபமே கொள்ளாதவனும் அவனே!

அதிகாலையில் என்னை எழுப்பி விடுவனும் அவனே!

தினமும் நான் வாக்கிங் செல்லும்போது என் வழித்துணையும் அவனே!

என் அலுவலகத் தோழனும் அவனே!

இரவு மனதை வருடும் மெல்லிசை பலபாடி என் சோகத்தை மறந்து என்னை உறங்கச் செய்பவனும் அவனே!

என்னுடைய எல்லாப் பயணங்களிலும் பங்கெடுப்பவனும் அவனே!

என் க்ரெடிட் கார்டு பாஸ்வேர்டைக் கூட அறிந்தவனும் அவனே!

ஒருநாள் அவனைக் காணாவிடில் துடிதுடிக்குது என் மனமே!

இவ்வளவு இருந்தும் அவனைவிட்டு விலகச் செய்தது அவனின் அந்தக் கெட்ட குணமே!

அந்தக் கெட்ட குணம் என்னவென்று கேட்டால், அடிக்கடி “பேட்டரி டவுன்“ஆகிவிடுவதும் !

அவசரமாகத் தேவைப்படும்போது “ஸ்விட்ச் ஆப்” ஆகிவிடுவதுமே!

அவன்தான் நம் அனைவரின் மூன்றாவது கையான “செல்போன்“!

Exit mobile version